ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்
(30/8/2008 - காஞ்சிபுரம்)

இலக்கிய வட்டம் மற்றும் வெளிச்சம், காஞ்சிபுரம் நடத்தும் விவாத அரங்கம்.

'மண்மொழி' இதழில் வெளிவந்த இராஜேந்திர சோழன் எழுதிய “பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்” கட்டுரையும், அதற்கு எதிர்வினையாகத் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய திராவிட இயக்கப் பகுத்தறிவு கட்டுரையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நாள்: 30-8-2008 சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி - மாலை 6 மணி (மதிய உணவு வசதியுடன்)

இடம்: பூமாலை வணிக வளாகம் (உழவர் சந்தை அருகில், தலைமை அஞ்சலகம் எதிரில்), இரயில்வே சாலை, காஞ்சிபுரம் - 631501.

விவாதிப்போர்: கவிதாசரண், இராஜேந்திர சோழன், சங்கமித்ரா, சித்தன், குடந்தையான், கதிரவன், மரகத ராகவராஜ், ப்ரவாஹன்.

(பார்வையாளர்களும் விவாதத்தில் கலந்துகொள்ளலாம்.)

தொடர்புக்கு: இலக்கிய வட்டம், 113, காமாட்சி அம்மன் சன்னதித் தெரு, காஞ்சிபுரம் - 631502. தொலைபேசி: +91-44-27220890 & +91-94431-86660.

info@sishri.org

SISHRI Home